பொன்னாலை வரதராஜ பெருமாளுக்கு இன்று வைகுண்ட ஏகாதசி கொடியேற்றம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி மகோற்சவம் இன்று (05.01.2022) புதன்கிழமை காலை 7.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து பத்து தினங்கள் உற்சவம் நடைபெற்று எதிர்வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெறும்.
தைப்பொங்கல் தினமாகிய 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருவடிநிலையில் தீர்த்தத்திருவிழா இடம்பெறும்.
மறுநாள் சனிக்கிழமை 1008 சங்காபிசேகமும் பூந்தண்டிகை உற்சவமும் இடம்பெறும்.
பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடித்து திருவிழாவில் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை