• Breaking News

    வெற்று எரிவாயு சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்!

     


    சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றதை காணமுடிந்தது.

    மட்டக்களப்பு மாவட்டத்தில் சமையல் எரிவாயு (லீற்றோ) தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். சமையல் எரிவாயு  சிலிண்டர் போத்தல்களுடன் மக்கள் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

    லீற்றோ சமையல் எரிவாயு மட்டக்களப்பு மாவட்ட ஏக விநியோகஸ்தர்களான எஸ்.எஸ்.எம்.சொல்கார் நிறுவனத்தினருக்கு இன்று காலை கொழும்பிலிருந்து வந்த லீற்றோ சமையல் எரிவாயுவை காத்தான்குடி கடற்கரை வீதியோரமாக வைத்து பொது மக்களுக்கு விநியயோகம் செய்தனர்.

    இதன் போது பொது மக்கள் சமையல் எரிவாயு வெற்று சிலிண்டர்களுடன் அங்கு  வரிசையில் நின்று பெற்றுச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.

    சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு போதுமானளவு சமையல் எரிவாயு வராததால் இந்த நிலைமை காணப்படுகின்றது.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad