• Breaking News

    இரத்த காயத்துடன் காவல் நிலையம் சென்ற மாணவி - காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்!

     


    பெற்றோரின் தாக்குலுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவித்து காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பெற்றோரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவி பேருவளை காவல்துறை பிரிவில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்விகற்று வருகிறார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

    பேருவளை காலவில கந்த பிரதேசத்தில் 17 வயதான பாடசாலை மாணவி, தாய் மற்றும் தந்தைக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

    பாடசாலைக்கு செல்ல சீருடை அணிந்து இருந்த நிலையில், சிறிய தவறுக்காக பெற்றோர் தாக்கியதாக இரத்தம் படிந்த சீருடையுடன் மாணவி காவல் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    மாணவியின் தந்தை சிவில் பாதுகாப்பு படையில் உப கண்காணிப்பாளராக கடமையாற்றுகிறார். பெற்றோரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.

    சம்பவத்தை அடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற மாணவி காலை உணவை உண்ணாமல் இருந்ததால், காவல்துறையினர் உணவை வழங்கி உபசரித்து விட்டு முறைப்பாட்டை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad