ஒரு வயது குழந்தைக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அனுப்பியுள்ள கடிதம்
தன்னைப்போன்று உடை அணிந்து புகைப்படம் அனுப்பிய ஒரு வயது குழந்தைக்கு, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடிதம் எழுதிய சம்பவம் வைரலாகி வருகின்றது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அக்டோபர் 31 ஆம் திகதியன்று இறந்தவர்களை மகிழ்விக்கும் நாளாக கருதி திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.
இந்த நாளில் சிறுவர், சிறுமிகள் மாறுவேட உடையணிந்து வீடுவீடாக சென்று இனிப்பு, பரிசு, பணம் ஆகியவை பெற்று மகிழ்வது வழக்கம்.
அந்த வகையில் கடந்த வருடம் அக்டோபர் 31 ஆம் திகதி அமெரிக்காவை சேர்ந்த ஜெலைன் சதர்லேண்ட் என்ற குழந்தை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் போன்று உடையணிந்துள்ளது.
இதனை புகைப்படமாக எடுத்து ஜெலனைனின் தாயார், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த புகைப்படத்தை பார்த்த இங்கிலாந்து ராணி தனது அரண்மனையை சேர்ந்த நிர்வாகிகள் மூலம் குழந்தை ஜெலைனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், ‘உங்கள் குழந்தையின் நேர்த்தியான உடை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை மிகவும் கவர்ந்தது. மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சதர்லேண்ட் குடும்பத்திற்கு இங்கிலாந்து ராணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை