• Breaking News

    வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா இடர் காரணமாக இடைநிறுத்தம்!

     


    வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா இடர் காரணமாக இடைநிறுத்தப்படுவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

    வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து இருந்தனர். 

     இந்நிலையில் , கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில் , பட்டத்திருவிழாவை நடாத்தும் போது , கொரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்தமையால் , பட்டத்திருவிழாவை இடை நிறுத்துவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. 

    அதேவேளை இம்முறை பட்டத்திருவிழாவிற்கு , விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சே தனது முழுமையான ஆதரவை தெரிவித்து இருந்தமையும் , அதனால் , பல்வேறு தரப்பினரும் ஏற்பாட்டு குழுவிற்கு தமது கண்டனங்களை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad