• Breaking News

    ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி - லிட்ரோ காஸ் நிறுவனத்தில் திடீர் மாற்றம்!

     


    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முத்துராஜவெல - மாபிம லிட்ரோ நிறுவனத்திற்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

    இதனையடுத்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

    அதற்கமைய, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேனுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad