• Breaking News

    தீ விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

     


    கொழும்பு, கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சொய்சாபுர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று (7) ஏற்பட்ட தீ விபத்து காரணமாக எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

    மொரட்டுவை சொய்சாபுர பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்தார்.

    எனினும் தீ விபத்துக்கான காரணம் என்னவென இதுவரை கண்டறியப்படவில்லை.

    இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad