• Breaking News

    யாழ். இலுப்பையடி சந்தியில் பட்டா ரக வாகன சில்லுக்குள் சிக்கியமோட்டார் சைக்கிள்!


    யாழ்ப்பாணம் பலாலி வீதி இலுப்பையடி சந்திப் பகுதியில் பட்டா மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நாவலர் வீதி வழியாக பயணித்த பட்டா ரக வாகனமும் பலாலி வீதி வழியாக வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் பட்டாவின் முன் சில்லுக்குள் மோட்டார் சைக்கிள்சிக்கி கொண்டதோடு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பாய்ந்ததன் காரணமாக காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad