காரைநகரில் பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி!
பனை சார் உற்பத்தி பயிற்சி நெறியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி நிகழ்வும் இன்றையதினம் (19) காரைநகர் பிரதேச சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாக பனைசார் உற்பத்தி பயிற்சி நெறியானது பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது. அப் பயிற்சி நெறியின் நிறைவில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
இதன்போது முதல் மூன்று இடங்களில் உள்ள உற்பத்தி பொருட்களை செய்த மூவர் கௌரவிக்கப்பட்டனர்.
காரைநகர் பிரதேச சபையின் செயலாளரான கி.விஜயேஸ்லரன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் ம.அப்புத்துரை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் ஊழியர்கள், பனைசார் உற்பத்தி பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை