2022 ம் ஆண்டுக்கான கடமைகள் யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!
2022 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, மத குருமார்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை