யாழில் விக்கிரகங்கள் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய உயர் பாதுகாப்பு வலய இராணுவ வீரர் கைது!
கடந்த மாதம் இந்து விக்கிரகங்கள் திருடப்பட்டு கடத்தப்படவிருந்த நிலையில் அதனுடன் தொடர்புடைய இருவர் தெல்லிப்பழை பொலிஸ் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விக்கிரகங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் தெல்லிப்பழை பொலிஸாரும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் யாழ். இராணுவ உயர் பாதுகாப்பு வலய இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் குறித்த விக்கிரகங்கள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் நேற்றிரவு (03) தெல்லிப்பழை பொலிஸ் மற்றும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இராணுவ வீரர் உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் இருந்த விக்கிரகங்களை திருடி வந்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தெல்லிப்பழை பொலிஸார் ஆழமான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை