யாழ். கட்டுடையில் குடுவுடன் குடும்பஸ்தர் கைது...!
இன்று (16), தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் வைத்து குடுவுடன் 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை