• Breaking News

    எரிவாயு விலை குறைப்பு



    08/08/2022 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    இதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 246 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4,664 ரூபாவாகும். 

    அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 99 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,872 ரூபாவாகும். 

    இதேவேளை, 2.3 கிலோ கிராம்​ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 859 ரூபாவாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad