பெண்களை படுக்கைக்கு அழைக்கும் நபருக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினி!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நேற்றுமுன்தினம் தொடங்கியது. பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் தற்போது தான் ரஜினி ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார். அதனால் ஜெயிலர் படம் மீது கொஞ்சம் அதிகம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படத்தில் திமிரு பட புகழ் மலையாள நடிகர் விநாயகன் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவர் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
விநாயகன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் பல பெண்கள் உடன் படுக்கையை பகிர்ந்ததாக அவர் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். ஒருத்தி என்ற படத்தின் விழாவில் பேசிய அவர் தனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் அவர்களிடம் நேரடியாகவே அதற்காக அணுகுவேன் என கூறி இருந்தார்.
பல மலையாள நடிகைகள் அதற்காக அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தான் பேசியது சர்ச்சை ஆனதால் விநாயகன் மன்னிப்பு கேட்டார்.
தற்போது சர்ச்சை நடிகருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி வாய்ப்பு கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்துகள் இல்லை